இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் உள்ளது.

தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புடைய 5,34,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 2,92,258 பேர் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 22,674 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் நாடு முழுவதும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2,46,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.