நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,811-ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 836 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,811-ஆக உயர்ந்துள்ளது.