கனடாவில் இலவச உணவுக்காக வரும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா: அதிகமாக நாடி வரும் முதியோர்... கனடாவிலுள்ள உணவு வங்கிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் Food Banks Canada என்னும் தொண்டு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை, கனடாவில், இந்த ஆண்டில், வரலாறு காணாத அளவில் கனேடியர்கள் இலவச உணவுக்காக உணவு வங்கிகளை நாட்டியுள்ளதாக தெரிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் மட்டும், 1.5 முறை கனேடியர்கள் உணவு வங்கிகளுக்கு வருகை புரிந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15 சதவிகிதமும், 2019 மார்ச் மாதத்தைவிட, அதாவது, கோவிட் காலக்கட்டத்துக்கு முன்பைவிட, 35 சதவிகிதமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு வங்கிகளை நாடுபவர்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்கள் முதலானோர்தான் அதிகம். இந்நிலையில், உணவுக்காக வரும் மக்களுடைய எண்ணிக்கையை சமாளிக்க சில உணவு வங்கிகள் தடுமாறிவருவதும் நடக்கிறது.

உடைந்த சமூக பாதுகாப்பு வலையமைப்பின் நீண்ட கால விளைவுகள், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு முதலானவற்றின் தாக்கம் ஆகியவை, கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை உணவு வங்கிகளை நோக்கி அனுப்பியுள்ளதைத்தான் இப்போது பார்க்கிறோம் என்று கூறும் Food Banks Canada அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாகிய Kirstin Beardsley, இந்த எண்ணிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும், வாழ்க்கையை சமாளிக்கத் திணறும் ஒரு நபர் உள்ளார் என்கிறார்.