பிரான்ஸ் போராட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெறும் கைகளால் பிரமாண்ட கட்டிடத்தில் ஏறிய முதியவர்

பிரான்ஸ்: ஆதரவு தெரிவித்து வானுயர கட்டிடத்தில் ஏறினார்... பிரான்ஸில் நடைபெற்று வரும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 60 வயதான ஆலியன் ராபர்ட் வானுயர கட்டிடத்தில் ஏறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரான்ஸ் நாட்டில் ஓய்வு பெறும் வயதை 62 ல் இருந்து 64 ஆக அந்நாட்டு அரசு அதிகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சிலந்தி மனிதன்என அழைக்கப்படும் ஆலியன் ராபர்ட், பாரிஸில் உள்ள 38 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சி வரை வெறும் கைகளால் பிடித்து ஏறினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 60 வயதான ஆலியன் ராபர்ட் வானுயர கட்டிடத்தில் ஏறியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது.