பேக்கரி விலைகள் குறைப்பதில்லை என்று உரிமையாளர்கள் சங்கம் முடிவு

கொழும்பு: பேக்கரி விலைகள் குறைப்பதில்லை... சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 75 வீதமான பேக்கரிகள் டீசல், விறகு அல்லது மின்சாரத்தை பயன்படுத்தியே இயங்குவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது செயற்பாட்டில் உள்ள 7,000 பேக்கரிகளில் 2,000 மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.