ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா; திருவள்ளூரில் மக்கள் அதிர்ச்சி

இன்று ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் உச்சபட்ச அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவள்ளூர் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.