காங்கிரஸ் தலைவர் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சகம்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாகப் பயன்படுத்தாது ஏன் என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் மூலம் கேள்வி எழுப்பிய இருந்தார்.

இதற்கு பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பை மேம்படுத்த செலவிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சிஏஜி அறிக்கையை கேட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2017-18ம் ஆண்டில் 8,ஆயிரத்து 884 கோடி ரூபாயாக இருந்த ரயில் பாதையை புதுப்பிப்பதற்கான செலவு 2020-21ல் 13, ஆயிரத்து 522 கோடியாகவும், 2021-22ல் 16 ஆயிரத்து 558 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக சிஏஜி கணக்குகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.