விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நிலையில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புத்தகங்களை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்துப் புத்தகங்கள், புத்தகப் பைகளை வாங்கிச் சென்றனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாடப்புத்தங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறப்பு தற்போது இல்லாத நிலையில் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.