பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் போராட்டம் இல்லை; மத்திய அமைச்சர் தகவல்

பஞ்சாப்பை தவிர வேறு எங்கும் நடக்கவில்லை... பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெறவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு விவசயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் மூலம் ஒரே நாடு ஒரே சந்தையை உருவாக்கும் நோக்கத்தில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

ஜி.எஸ்.டி. மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கு நிறைவேறியது. இதேபோன்று வேளாண் சட்டங்கள் மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற இலக்கு நிறைவேறும். தேசியத் தேர்வுகள் மூலம் ஒரே நாடு ஒரே தேர்வு என்ற இலக்கும், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டமும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.