வீட்டின் வாடகை தொகை அதிகரிப்பு என தகவல்கள் வெளியானது

கனடா: ரொறன்ரோவில் பெரும்பாக பகுதியில் அதிகூடிய வாடகை தொகை பதிவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு டொரன்டோவின் வாடகை தொகை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாக வாடகை அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் வாடகை தொகை 2267 டாலர்கள் என பதிவாகியுள்ளது, இது கடந்த மாதத்தை விடவும் 155 டொலர்கள் கூடுதல் தொகை என்பதுடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தத் தொகை 20142 ஆக காணப்பட்டுள்ளது. TorontoRentals.com என்ற இணையதளத்தில் இந்த வாடகை தொகை பற்றிய விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் காணப்படும் பிரதான நகரங்களான மிஸ்ஸிகுவா, வோகன், இடாபிகொக், நோர்த் யோர்க், யோர்க், ஈஸ்ட் யோர்க் ஸ்காட்ரோ ஆகிய நகரங்களில் வாடகை தொகை பற்றிய தகவல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு எனினும் ரொறன்ரோவில் வாடகை தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பெரிய அளவிலான வீடுகளின் வாடகை தொகை பெருமளவு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.