இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிப்பு .... தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளின் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து கொண்டு வருகிறது.

அதே போன்று, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நகரின் ஒரு பகுதியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், ஈரோடு, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்கள் வரைக்கும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வரும் திங்கட்கிழமை வரைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரம் வரைக்கும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.