CBSE மாணவர்கள் கவனத்திற்கு இது மாற்றம்

இந்தியா: பொதுத்தேர்வு கால அட்டவணை மாற்றம் .... இந்தியாவில் 2022 – 2023ம் கல்வியாண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10, 12ம் வகுப்புகளுக்கு ஒரே கட்டமாக பொதுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (CBSE) திட்டமிட்டுள்ளது.

இதனை அடுத்து தேர்வு கால அட்டவணை குறித்த பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் கடந்த 29ம் தேதி அதிகாரப்பூர்வ அட்டவணையை CBSE வெளியிட்டது.அதில் 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு 2023 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாக 12ம் வகுப்பிற்கு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக தேர்வு தேதிகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கால அட்டவணையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஏப்ரல் 4ம் தேதி நடைபெறவிருந்த Urdu Elective, Sanskrit Elective, Carnatic music vocal, Carnatic music mel ins, Carnatic music per ins mridangam, Knowledge tradition & practices of India, Urdu core, Front office operations, insurance, geospatial technology, electrical technology, taxation and mass media உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு மார்ச் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையையும் CBSE தற்போது வெளியிட்டுள்ளது.