இம்முறை மதுரையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சென்னை

ரூ. 243 கோடிக்கு விற்பனை... தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் ரூ.243 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த முறை மதுரையை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடம் பிடித்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக வாரம் தோறும் ஞாயிற்றுகிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் மற்ற நாளில் செயல்பட்டு வந்த அனைத்து கடைகளும் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்கள் சனிக்கிழமையான நேற்று மது வாங்க டாஸ்மாக் கடையில் குவிந்தனர். அதன் படி நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும 243 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளன.

இதில் எப்போதும் மதுரை மாவட்டத்தில் அதிக மதுபானம் விற்பனையாகி வந்தது. ஆனால் இந்த முறை மதுரையை தள்ளி சென்னை முந்திக்கொண்டது. ஊரடங்கு காரணமாக சென்னையில் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

சென்னை மண்டலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.52.50 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் ரூ.49.75 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.48.26 ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் ரூ.45.23 கோடிக்கும் மது விற்பனையாகியது.