ஹஜ் புனித பயணத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி

மெக்கா: சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி... மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

மெக்காவில் இருந்து புனித யாத்திரை மேற்கொண்ட பல லட்சம் இஸ்லாமியர்கள், மினா நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மினாவில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டனர். சாத்தான் மீது கல் எறிவதாக நினைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி யாத்ரீகர்கள் கற்களை எறிவார்கள். மவுன்ட் அராஃபத் பகுதியில் குவிந்த யாத்திரீகர்கள் அருகிலுள்ள Muzdalifa பகுதியில் கற்களை சேகரித்தனர். பின்னர் 25 மீட்டரில் உள்ள மூன்று தூண்கள் மீது 21 கற்களை வீசி எறிந்தனர்.

கற்களை வீசுவதன் மூலம் தீமைகளை விரட்டுவதாக நம்பப்படும் இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் குவிந்துள்ளனர்.

அவர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா விதிகள் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் குவிந்துள்ளனர்.