புயல் ... மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முக. ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மீனவர்களுக்கு ரூ,35,000 நிவாரணத்தொகை .... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல வலுவடைந்து டிச.8ம் தேதி புயலாக உருமாறியது.

இதனை அடுத்து இப்புயலால் தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து கொண்டு வருகிறது.நேற்று சென்னை அருகே சுமார் 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் இரவு புதுவை மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டா அருகே பலத்த காற்றுடன் கரையை கடந்தது.

இந்த புயலால் கடற்கரை பகுதிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாட்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே அதன் படி முழுமையாக சேதமடைந்த கட்டுமரத்திற்கு ரூ. 32,000, பகுதியாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்படும். இதை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வழங்க முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.