ஆறாவது வாரமாக இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு... கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் இன்று எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஆறாம் கட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் ஆகஸ்ட்30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி 6வது வாரமாக இன்று எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 106 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறி சாலையில் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், செயல்படஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.