ரயில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்..மக்கள் கவலை..

இந்தியா: ரயில் பயணம் சாமானிய மக்கள் மத்தியில் மிக விருப்பமான போக்குவரத்து. இதற்கு காரணம் கட்டண குறைவு.விமான பயணத்துடனோ அல்லது ஸ்லீப்பர் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது இந்த கட்டண விகிதம் மிக குறைவு தான்.ஆனால் இனி இதற்கும் பிரச்சனை எனலாம். ஏனெனில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இருக்கும்.மற்ற பெட்டிகள் அனைத்தும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நார்மல் கோச்களாக இருக்கும் பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட்டால், கட்டணங்களும் அதிகரிக்கும்.

இதனால் சாமானிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.குறிப்பாக இந்த திட்டமானது பாண்டியன், முத்து நகர், மலைக் கோட்டை, சோழன், பொதிகை, நீலகிரி உள்பட பல ரயில்களில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பயணிகள் மற்றும் சாதாரண ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி, பல சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையி;ல் ஏசி பெட்டிகள் அதிகரித்தால், ஏழை எளிய மக்கள் பயணிப்பது கடினமானதாகி விடும். இனி ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி 3 பெட்டிகளை இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு ஏசி 3 பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரிக்கும்.