புயல் கரை கடந்த போது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

நிவர் புயல் கரை கடந்த போது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

புதுச்சேரிக்கு அருகே தீவிரப் புயலாக வலுவிழந்து அதிகாலை 4 மணியளவில் கரை கடந்தது நிவர் புயல். நேற்று இரவு (நவ.25) 11.30 மணியளவில் மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றோடு புதுச்சேரிக்கு கரை கடக்க துவங்கியது.

மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் நிவர் புயலால் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரை கடந்த போது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

இந்நிலையில் புயல் முழுவதும் கரை கடக்க தாமதம் ஆகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அதிதீவிர நிலையிலிருந்து தீவிரப்புயலாக மாறியதாக சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன்அறிவித்தார்.