கர்நாடகா - மகாராஷ்ட்ரா முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

புதுடில்லி: கர்நாடகா -மகாராஷ்டிரை இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவை இரு மாநிலங்களும் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக இருமாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

இப்பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களில் எந்த ஒரு மாநிலமும் உரிமை கோரமுடியாது என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கர்நாடகா, மகாராஷ்ட்ரா மக்களிடையே நல்ல சகோதரத்துவம் இருப்பதாகவும் இந்த அமைதியைக் குலைத்து விட அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.