ஆஸ்திரேலியாவில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது

ஆஸ்திரேலியா: போர் விமானம் விபத்துக்குள்ளானது... அமெரிக்க போர் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷிய நாட்டு ராணுவ வீரர்கள் ஆஸ்திரேலியாவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்க கடற்படை வீரர்கள் 23 பேர் பயணித்த போர் விமானம், கிழக்கு திமோர் கடலில் அமைந்துள்ள மெல்வில் தீவில் விழுந்து நொறுங்கியது.

படுகாயமடைந்த 23 வீரர்களும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.