விஜயதசமி ... அரசுப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

சென்னை : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டு வந்த பள்ளி கல்வித்துறை இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் வருவர் என்பதால் தொடக்கக் கல்வி இயக்குனர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.