16 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குபதிவு இன்று

புதுடெல்லி : நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இதன் மூலம் 4 மாநிலங்களில் உ ள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.