புறாவின் எச்சத்தால் தொற்று ஏற்படலாம் என்று எச்சரிக்கை தகவல்

சென்னை; புறா எச்சத்தால் தொற்று?... புறாக்களின் எச்சத்தால் தொற்று ஏற்படலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று நுரையீரல் கிடைக்காததால், தொடர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் மீனாவின் கணவருக்கு, புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் எஸ். தினகரன் குறிப்பிட்டதாவது,

''புறா எச்சத்தால் தொற்று ஏற்படுமா என்றால், ஆம் என்கிறது அறிவியல். புறா பட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.