ஒன்றல்ல இரண்டல்ல 100 சைபர் தாக்குதல்களை முறியடிக்கிறோம்

கொச்சி: இஸ்ரோ தலைவர் தகவல்... தினமும் நூறு சைபர் தாக்குதல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் முறியடித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

கொச்சியில் நடைபெற்ற இரண்டு நாள் சைபர் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய சோம்நாத், ராக்கெட் தொழில்நுட்பத்தில் அல்ட்ரா மாடர்ன் மென்பொருள் மற்றும் சிப் அடிப்படையிலான கனப் பொருள் பயன்படுத்தப்படுவதால் அது சைபர் தாக்குதலுக்கு இலக்காவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராக்கெட்டின் உள்ளே வடிவமைக்கப்பட்டுள்ள ஹார்டுவேர் சிப்களின் பாதுகாப்புக்காக பல்வேறு பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.