சுந்தர்.சி இயக்கியுள்ள காபி வித் காதல் படத்தின் ரிலீஸ் எப்போது

சென்னை: ரிலீஸ் பற்றி தகவல்... சுந்தர் சியின் 'காஃபி வித் காதல்' படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சியின் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'காஃபி வித் காதல்'. தன்னுடைய திரைப்படங்களில் நட்சத்திர பட்டாளங்களை களமிறங்கும் சுந்தர் சி, இந்த படத்திலும் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே காட்டியுள்ளார்.

நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இதுதவிர விஜய் டிவி டிடி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாம். அடுத்த மாதம் படம் வெளியாக உள்ளதால் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.