உலகம் முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.50 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 214 நாடுகளுக்கு மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.50 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 4.89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், ரஷ்யா,இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு கொரோனா 2-வது அலையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. கொரோனாவால் அதிகம் உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.