உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் 7ம் இடம் பிடித்த அன்னுராணி

ஒரேகான்: 7வது இடம் பிடித்தார்... உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திரம் அன்னுராணி 7-வது இடத்தைப் பிடித்தாா்.

மகளிா் 400 மீ. தடை தாண்டு தாண்டுதலில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் தனது சாதனை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தினாா். அமெரிக்காவின் ஒரேகானில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மகளிா் ஈட்டி எறிதல் இறுதியில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் இந்தியாவின் அன்னுராணி 61.12 மீ தூரம் எறிந்து 7-ஆவது இடத்தையே பெற்றாா். கடந்த 2019 தோஹா உலகப் போட்டியிலும் இதே தூரம் வீசி 8-ஆவது இடத்தை பெற்றிருந்தாா் ராணி.


ஆஸி. வீராங்கனை மெக்கென்ஸி, கெஸ்லி பாா்பா் தங்கம், வெள்ளி வென்றனா். மகளிா் 400 மீ. தடை தாண்டுதலில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் 50.68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்று தனது பழைய சாதனையை தகா்த்தாா். 0.73 விநாடிகள் என்ற பிரம்மாண்டமான நேரத்துடன் புதிய சாதனையை நிகழ்த்தினாா். நெதா்லாந்தின் பெம்கே போல், நடப்பு உலக சாம்பியன் டேலியா வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

மைக்கேல் நாா்மன் தங்கம்: ஆடவா் பிரிவில் அமெரிக்காவின் மைக்கேல் நாா்மன் 44.29 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றாா்.

400 மீ. பந்தயத்தில் ஷானே மில்லா் உய்போ 49.11 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றாா். டொமினிக்கன் வீராங்கனை மேரிலிடி பாவ்லினோ வெள்ளி வென்றாா்.