ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூர் - டெல்லி அணிகள் பலப்பரிட்சை

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், பெங்களூர் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு நடக்கிறது.

துபாயில் நடைபெற உள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியதில், பெங்களூர் அணி அதிகபட்சமாக 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு தொடரில், வலுவான அணிகளாக உருவெடுத்துள்ள டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள், தலா 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 2 மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.