ஒருநாள் போட்டிக்கு தவான்... கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு

புதுடில்லி: இந்திய அணி அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிகக்ப்பட்டுள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார்.

அதேபோல் நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் டிராவிட்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். லக்ஷ்மனுடன், ஹிருஷிகேஷ் கனிட்கர் (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்) நியூஸிலாந்திற்கு செல்வார்கள் என பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள், மூவரும் நியூசிலாந்தில் லட்சுமணனுக்கு உதவுவார்கள்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.