மும்பை இந்தியன்ஸ் அதிரடியில் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு... ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு ரன்களை 209 வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

13 ஆவது ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று சார்ஜாவின் நடைபெற்ற 17 ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் குயிண்டன் டீகாக்கும் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் சிக்ஸர் விலாசிய ரோகித் ஷர்மா அடுத்த பந்திலேயே அவுட் ஆகி மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இருப்பினும் சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டீகாக் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

ஆனால் அணியின் ஸ்கோர் 48 ஆக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து, தொடர்ந்து தனது அதிரடியை காட்டிய டீகாக் 67 ரன்களில் ரஷித்கான் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இஷன் கிஷன் 31 ரன்களிலும் ஷர்திக் பாண்டெயா 28 ரன்களிலும் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை எடுத்தது. இதில் பொலார்ட் 25 ரன்களுடனும் குர்ணால் பாண்டெயா 20 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை சந்தீப் ஷர்மா, சித்தார் கௌவுல் தல 2 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதனை அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.