மிகப்பெரிய சிக்ஸரை அடித்து சாதனை படைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்


நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33-வது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது.

இந்நிலையில், நீண்ட தூரம் சிக்ஸரை அடித்து நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஷுப்மான் கில் 30-வது ஓவரில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கிரீஸுக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இத


எனினும் , நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் அடித்த சிக்ஸரை விட கசுன் ராஜித் வீசிய 36-வது ஓவரின் நான்காவது பந்தில் மிக நீண்ட சிக்சரை ஷ்ரேயாஸ் ஐயர் அடித்தார். அவர் அடித்த சிக்ஸர் 106 மீட்டர் தூரத்திற்கு சென்றது.

இதையடுத்து இதற்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 104 மீட்டர் சிக்ஸர் அடித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் பின் தள்ளினார்.