விராட் கோலியின் சாதனையை முறியடிக்கவில்லை ஷூப்மன் கில்

மும்பை: ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வருடம் ஒருமுறை நடந்து வருகிறது. இதில் விராட் கோலியின் சாதனையை ஷுப்மன் கில் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போய் உள்ளது.

உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறி வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

2016இல் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும். சராசரி 81. ஸ்டிரைக் ரேட் 152 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் 123 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம். இந்த சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

ஆனால் ஜடேஜா ஓவரில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார் கில். 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

விராட் கோலி (ஆர்சிபி- 2016) - 973 , ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்-2023)- 890, ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்-2022) – 863, டேவிட் வார்னர் (ஹைதராபாத்- 2016) – 848, கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்- 2018)- 735