மகன் நடராஜன் உலக பிரபலம் ஆனாலும் தனது இயல்பை மாற்றாத தாய்

தனது ஆட்டத்தின் வாயிலாக வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொண்டு புகழ் அடைந்து வருகிறார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். தற்போது அவர் உலக அளவில் பிரபலமாகிவிட்டார்,

ஆனால் இயல்பு மாறாத அவரது தாய் இன்றும் ஊரில் சில்லி சிக்கன் போட்டு விற்பனை செய்து வருகிறார் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்த இளைஞன் இன்று உலகம் போற்றும் கிரிக்கெட் வீரர்.

இது ஒரே நாளில் சாத்தியப்படவில்லை. இதற்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. தன்னுடைய விடா முயற்சியால் டிஎன்பில் போட்டியில் விளையாடி முத்திரை பதித்த நடராஜன், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நெட் பவுலராக சென்ற அவர் வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முத்திரையும் பதித்துவிட்டார். இதனால் அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடராஜனின் தாயார் அவரது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் சிக்கன் கடை நடத்துகிறார். கடையில் சில்லி சிக்கன் விற்பனை செய்கிறார்.

தற்போது தனது மகன் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராகிவிட்டாலும் கூட அவர் இப்போதும் அவர் தனது இயல்பு மாறாமல் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்.