ஐபிஎல் தொடரில் செம வருமானம் பார்த்த தொலைகாட்சி

ஐபிஎல் தொடரில் செம வருமானம் பார்த்த தொலைகாட்சி... 13வது சீசன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமை தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வசம் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் விளம்பர வருவாய் குறையும் என முன்பு கூறப்பட்ட நிலையில் காசை அள்ளி இருக்கிறதாம் அந்த தொலைக்காட்சி.

2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. கொரோனாவால் பல நிறுவனங்கள் வருவாய் இழப்பால் தத்தளித்துவரும் நிலையில், விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டது.

இதனால் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வருமானம் குறையும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது, அதிக பார்வையாளர்கள் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி 2020 ஐபிஎல் தொடரில் 2400 கோடி விளம்பர வருவாய் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி விளம்பரம் மூலம் 2250 கோடியும், ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் 200 முதல் 250 கோடியும் வருவாய் ஈட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. பார்வையாளர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்த நிலையில், வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டது தான் என்கிறார்கள். அந்த வகையில் அந்த தொலைக்காட்சிக்கு இது கொஞ்சம் வருத்தம் தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.