மனைவி கர்ப்பமாக இருப்பதை டிவிட்டரில் அறிவித்தார் விராட்கோலி

அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி டிவிட்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். நாங்கள் இருவரும் எதையும் மறக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது சாதராணமான உறவுதான் என்று 2014 ஆம் ஆண்டு அனுஷ்கா ஷர்மா கூறியிருந்தார்.

ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமனம் நடைபெற்றது. அதன் பிறகு புது டெல்லியிலும், மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை அவருடைய கணவர் விராட் கோலி அறிவித்துள்ளார். விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இப்போது நாங்கள் மூன்று பேர். புது நபர் ஜனவரி 2021 ஆம் ஆண்டு வருவார்' என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரின் இந்த பதிவையடுத்து பலரும் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.