நாங்கள் வழி வாங்குவதில்லை, சம உரிமையை மட்டும் கேட்கிறோம்- டுவைன் பிராவோ

அமெரிக்காவில் கடந்த மே 25-ம் தேதி கடந்த ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவர் போலீசார் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த போராட்டம் இனவெறிக்கெதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது. உலகின் பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி,ஐபிஎல் போட்டியின்போது, இனவாதத்திற்கு ஆளானதாக கூறியிருந்தார். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் பெராராவையும் சிலர் கறுப்பினத்தைக் கிண்டல் செய்யும் ‘கலு’ என்ற வார்த்தையால் அழைத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சூப்பர் கிங்ஸ் அணியின் வெயின் பிராவோ இனவாதம் தொடர்பாக கூறுகையில், ஒரு கறுப்பின மனிதனாக, உலக வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனாலும் எப்போதும் நாங்கள் பழிவாங்க வேண்டும் என்று கேட்கவில்லை. எப்போதும் மரியாதைக்கும் சம உரிமைக்குமே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். ஆனால் எங்கள் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், உலகளவிலும் மாபெரும் மனிதர்களைப் பாருங்கள். நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்டவர்கள் எங்களின் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இதுவரை நடந்தது போதும். எங்களுக்குச் சம உரிமை வேண்டும். எங்களுக்குப் பழிக்குப் பழி வேண்டாம். போர் வேண்டாம். எங்களுக்கு மரியாதைதான் வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.