சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ன ?

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றதில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் ஆடுகளம் கொஞ்சம் ட்ரிக் ஆனது என்பதால் கவனமாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அணிகளும் களமிறங்கின. முதலில் பந்து வீசினால் 60 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீசியது.

முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். தனது அபார இன்ஸ்விங் பந்தால் ஆரோன் பிஞ்ச்-ஐ திணறடித்தார். படிக்கல் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டி வில்லியர்ஸ் இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 11 ஓவர் முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களே எடுத்திருந்தது. சென்னையின் அபார பந்து வீச்சு காரணமாக ஆர்சிபி 16 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் விராட் கோலி தனது சுயரூபத்தை வெளிக்காட்டினார். இதனால் 169 ரன்கள் குவித்து விட்டது.

டெத் ஓவரான கடைசி 4 ஓவரில் மட்டும் ஆர்சிபி 66 ரன்கள் திரட்டி விட்டது. இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பீஸ், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னைக்கு வெற்றி என்ற நிலை உருவாகி இருந்தால் நம்பிக்கை அதிகமாக இருந்தது. பவர் பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களே அடிக்க முடிந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் அறிமுக வீரர் ஜெகதீசன் களமிறங்கினார் இவர்களால் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க முடிந்ததே தவிர அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை. டோனி இன்னைக்கு அடிப்பார் என்று பார்த்தால் அவரும் 10 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.