ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய 3 கோவில்கள்!

நம்முடைய இந்தியா மிகவும் அழகான ஆன்மீகமான நாடு. இந்தியாவில் உள்ள கோவில்கள் மிகப்பெரிய அழகான மலைகளில், அடர்ந்த காட்டு பகுதிகளுக்குள், மிகவும் நெரிசலான தெருக்களுக்குள், கடற்கரைகளில் அருகில் இப்படி ஏராளமான இயற்கை சூழல்களில் ஒன்றிணைந்து இந்த கோவில்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட கோவில்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அப்படி மிகவும் பிரபலமாக உள்ள 3 கோவில்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இமயமலையில் உத்தரகண்ட் பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலானது விஷ்ணு பகவானுக்கான இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,248 அடி உயரத்தில் உள்ளது. இது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இமயமலையின் எலும்பை உருக்கும் குளிர் காரணமாக ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் தொடக்கம் வரை மட்டுமே கோவில் திறந்திருக்கும். இந்த கோவில் 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

நம்முடைய தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான முக்கியமான கோவில்களில் ஒன்று ராமநாத சுவாமி கோவில். இந்த கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர் ராமநாத சுவாமி. பித்ருதோஷ நிவர்த்தி தலமாக இந்த ராமநாத சுவாமி கோவில் இருக்கிறது. ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்க ராமபிரான் இங்கு வழிபட்டுள்ளார்.

பூரி ஜெகந்நாதர் கோவில் என பிரபலமாக அறியப்படும் ஜெகர்நாத் கோவில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மூலவர்கள் கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை. இங்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தேரோட்ட திருவிழா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. கோயிலின் கருவறையில் மரத்தால் ஆன மூலவர் சிலைகள் உள்ளது.

இது இந்த கோவிலில் மட்டுமே உள்ள சிறப்பு. இந்த கோவிலின் மேல் பறவைகள் பறப்பதில்லையாம். அதுபோல கோவில் கோபுரத்தில் பறவைகள் அமரவும் செய்யாதாம். கோபுரத்தின் மேலுள்ள சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்குமாம். இப்படி ஏராளமான சக்திகள் கொண்டது இந்த கோவில்.