மாம்பழ நகரமான சேலத்திற்கு ஒரு சுற்றுலா..!

தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரம் சேலம். இது சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மாம்பழ நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இது, மாநகராட்சி மன்றமாக விளங்குகிறது.

சேலம் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜாமா மஸ்ஜீத் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.

மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம். சேலம் ஒரு பிரபலமான வணிக மையமாகவும் இருக்கின்றது. இந்நகரம் நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் வெள்ளிக் கொலுசுகளையும், உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும் தரமான துணிவகைகளையும் உற்பத்தி செய்கிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டு துணிகளினால், சேலம், மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வந்தால் இவற்றை மலிவான விலையில் வாங்கலாம். சேலம் நகரின் வானிலை சேலத்தில் வெப்ப மண்டல வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இங்கு செல்வதற்கு, நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலமே சிறந்ததாகும்.

சேலத்தை எப்படி அடையலாம்?
சேலத்திற்கு பயணிப்பது மிகவும் எளிதாகும்; ஏனெனில் இது வான், ரயில் மற்றும் சாலை வழிப் போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு பல விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்திலிருந்து நாட்டின் மற்ற நகரங்களுக்கும், உலகின் பல பகுதிகளுக்கும் விமானங்கள் உள்ளன. சேலம் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் சந்திப்பாகும். இங்கிருந்து, நாட்டின் எல்லா முக்கியமான பெருநகரங்களுக்கும், சிறுநகரங்களுக்கும் ரயில்கள் உள்ளன. ஏராளமான பேருந்துகள், சேலத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.