கடல் அலைகளை ரசித்து உணவு அருந்த... சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற அஞ்சுனா பீச்!

கோவையில் உள்ள அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடி வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம்.

அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது. அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

அஞ்சுனா பீச் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல் அல்லாமல், ஆழமாகவும், செங்குத்தாகவும் சரிந்து காட்சி தரும். எனவே ஆபத்து நேரத்தில் உதவி செய்வதற்காக எப்போதும் கடற்கரையை சுற்றி ஆட்கள் காவலுக்கு நின்று கொண்டே இருப்பார்கள். எனினும் நீங்கள் கடலில் உங்கள் விருப்பப்படி நீந்தி மகிழலாம்.

அஞ்சுனா பீச்சின் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இங்கு லெதர் பைகள், காலணிகள் என்று உங்கள் விருப்பத்திற்கேற்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். மேலும், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகள், அஞ்சுனா பீச்சிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. அங்கும் எளிதில் சென்று ரசித்து மகிழலாம்.