அழகான சிறிய மலை நகரமான ஜிரோவில் உள்ள அழகிய அம்சங்கள்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றான ஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது. இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள்.

இங்கு காணப்படும் அபடணி பழங்குடியினர் இயற்கை கடவுளை வழிபடுகின்றனர். மற்ற பழங்குடியினரை போல இவர்கள் நாடோடிகள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களாவார்கள். பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

இங்கு மார்ச் மாதம் கொண்டாடப்படும் மியோ கோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப்படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாடப்படும் ட்ரீ திருவிழா போன்றவைகள் மிகவும் பிரசித்தியானவைகள். திருவிழா நேரத்தில் ஜிரோவிற்கு சுற்றுலா வந்தால் அருணாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற கலையை கண்டு கழிக்க வாய்ப்பு கிடைப்பதால் இக்காலத்தில் இங்கு வருவதே சிறந்த காலமாகும்.

ஈர நில வேளாண்மை போக தங்கள் வாழ் வாதாரத்துக்காக கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி பொருள்களையும் இங்குள்ள மக்கல் தயாரித்து விற்கின்றனர். அபடணி மக்கள் இங்கு பல திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள். இவை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒன்றாக உள்ளது.