உலகில் மிக உயரமான 5 கலங்கரை விளக்கங்கள்!

கலங்கரை விளக்கங்கள் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. கடற்கரையின் அருகில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பி அதன் மேல் ஒளியை உமிழும் விளக்குகளை பொருத்தி அதன் மூலம் வெளிச்சத்தை கடலில் தெரியுமாறு செய்வார்கள். இப்படி அமைக்கப்படும் கோபுரங்கள் மிக உயரமாக இருக்கும் அப்படி மிகவும் உயரமான 5 கலங்கரை விளக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

லைட்ஹவுஸ் ஆப் ஜெத்தா
முதலிடத்தில் இருப்பது லைட்ஹவுஸ் ஆப் ஜெத்தா. இந்த கலங்கரை விளக்கமானது சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் அமைந்துள்ளது. இது ஜெத்தா துறைமுகத்தின் வடக்கு பகுதியில் வெளிப்புற நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. இதன் உயரம் 133 மீட்டர் அதாவது 436 அடி உயரம். 1990 ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் வெளிச்சம் 25 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு தெரியும். உலகிலேயே இதுதான் மிக உயரமான கலங்கரை விளக்கம்.

யோகோஹாமா மரைன் டவர்
இரண்டாம் இடத்தில் இருப்பது யோகோஹாமா மரைன் டவர். இந்த கலங்கரை விளக்கம் ஜப்பானின் யோகோஹாமா வில் அமைந்துள்ளது. 1961 ம் ஆண்டிலிருந்து இது செயல்பட்டு வருகிறது. 25 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு இதன் வெளிச்சம் தெரியும். இதன் உயரம் 106 மீட்டர்கள் அதாவது 348 அடி உயரம். இது இரண்டாவது உயரமான கலங்கரை விளக்கமாகும்.

பாயிண்டே டே பேர்பிளீயர் லைட்
மூன்றாவது இடத்தில் இருப்பது பாயிண்டே டே பேர்பிளீ யர் லைட் கலங்கரை விளக்கம். இந்த கலங்கரை விளக்கமானது பிரான்சில் உள்ள லோயர் நார்மேண்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 29 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு இதன் வெளிச்சம் தெரியும். இது 75 மீட்டர் அதாவது 247 அடி உயரம் கொண்டுள்ளது.

தி லைட்ஹவுஸ் ஆப் ஜெனோவா
நான்காவது இடத்தில் இருப்பது தி லைட்ஹவுஸ் ஆப் ஜெனோவா. இந்த கலங்கரை விளக்கம் லேன்ட்டெர்னா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது இத்தாலியின் ஜெனோவாவில் உள்ளது. இதன் வெளிச்சம் 25 நாட்டிக்கல் மைல் தூரம் தெரியும். இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் 76 மீட்டர்கள் அதாவது 249 அடி உயரம்.

முலன்டோயூ லைட்ஹவுஸ்
ஐந்தாவது இடத்தில் இருப்பது முலன்டோயூ கலங்கரைவிளக்கம். இந்த கலங்கரை விளக்கம் ஹய்னான் ஹெட் லைட் எனவும் அழைக்கப்படுகிறது. இது சீனாவின் ஹய்னானில் அமைந்துள்ளது. இதனுடைய வெளிச்சம் 25 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு தெரியும். இதன் உயரம் 72 மீட்டர்கள் அதாவது 237 அடிகள்.