மழைக்காலத்தில் நீங்க அனுபவிக்கவேண்டிய டாப் 5 பகுதிகள்!

உங்களுக்கு மழை பிடிக்குமா? நெடுந்தூரம் பயணம் பிடிக்குமா? அப்ப உடனே முடிவெடுங்க இந்த மழைக்காலத்தில் நீங்க அனுபவிக்கவேண்டிய டாப் 5 பகுதிகள். இந்த இடங்கள் நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவங்களை தர காத்திருக்கின்றன.

குடகு மலை பயணம்
இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இது மிகவும் அழகான, அமைதியான இயற்கையை ரசிக்க ஏதுவான பகுதியாகும். குடகுமலையில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதிகளாக திபெத்தியன் மடம், அபெய் நீர்வீழ்ச்சி, குசால்நகர் முதலியன உங்களை சொக்கவைக்கும் அழகுடன் திகழ்கின்றன. சென்னையிலிருந்து குடகு செல்ல குறைந்தது 10 மணி நேரம் ஆகின்றது.

ஜாக் அருவி
மலையிலிருந்து கீழே அருவி பாயும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது என்று சொல்பவர்களுக்கு சிறந்த இடமாக ஜாக் அருவி உள்ளது. பெங்களூருக்கு அருகில் இந்த அழகான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செல்ல கொஞ்சம் கூடுதல் தொலைவு என்றாலும், நீங்கள் செய்யும் பயணம் துளியளவும் வீணாவதில்லை. அந்த அளவுக்கு சிறப்பான பயணமாக அமையும். சென்னையிலிருந்து 13 மணி நேரமும், பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 7 மணி நேரமும் ஆகும்.

மூணாறு
மூணாறுக்கு பொதுவாக தேனிலவு கொண்டாடத்தான் செல்வார்கள் என்ற எண்ணம் அநேக பேருக்கு இருக்கிறது. ஆனால் கல்லூரி தோழர்களுடன் செல்லவும் இது மிகச்சிறந்த இடம் என்றே கூறலாம். உண்மையாக கல்லூரி கால சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இதுவாகும்.

ஊட்டி
ஊட்டி அடிக்கடி போய்ட்டு வரும் பகுதிதானே என்கிறீர்களா.. பெங்களூருவிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், சிறப்பான இடம் இதுவாகும். சென்னையிலிருந்தும் சற்று தொலைவுதான். ஆனால் உங்கள் கோடை விடுமுறைக்கு மட்டுமல்லாமல், இங்கு மழையையும் ரசிக்க மிக அழகான இடங்களும் உள்ளன.

சிக்மகளூர்
கபைஃன் எனப்படும் ஒருவித மூலக்கூறுவின் வாசம் உங்களுக்கு பிடிக்குமா. அதுதானுங்க காஃபிக்களின் ஒரு வித வாசம். அது ஒரு பகுதிமுழுவதும் பரவி இருந்தால் எப்படி இருக்கும்? அந்த இடத்துக்கு செல்ல ஆசை படுகிறீர்களா? அதுதான் கர்நாடகத்தின் மிக உயரமான சிகரமான சிக்மகளூர். சென்னையிலிருந்து 609 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிக்மகளூரு நீங்கள் கட்டாயம் பார்த்துவிட்டு வரவேண்டிய பகுதியாகும். இது பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 5 மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.