பிரசித்தி பெற்ற பூதலூர் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேக விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ரயிலடியில் அருள்பாலிக்கும். அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ரயிலடியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் சனிக்கிழமை இரவு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதை ஒட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப்பொடி போன்ற மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

இதையடுத்து 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டது. பின்னர் யாக பூஜைகள் ந்டந்து சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. இதில் சக்கராப்பள்ளி சௌந்தர் குழுவினரின் கைலாச வாத்தியம், விஷ்ணம்பேட்டை மதுமிதா, சந்தோஷி சகோதரிகளின் இன்னிசை கச்சேரி ஆகியவை நடந்தன.

ஏற்பாடுகளை பூதலூர் ரயிலடி மற்றும் 18 பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.