ஐப்பசி மாத பூஜை .. சபரிமலை நடை இன்று திறப்பு


சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை முதல் வருகிற 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் நாளை கணபதி ஹோமம் , உஷ பூஜை , புஷ்பாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, கலசபிஷேகம், கலபாபிஷேகம் மற்றும் உதயஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதனை அடுத்து 5 நாட்கள் தொடர்ந்து நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

அன்றுடன் ஐயப்பன் மாத ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைகிறது. மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நவம்பர் 10ம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.