திருப்பதி ..பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் தரம் உயர்த்தப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு


திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் “டயல் யுவர்” நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதையடுத்து அதில் பக்தர்களின் கேள்விக்கு தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மாரெட்டி பதில் அளித்தார். அதன் பின் பேசிய அவர், வைகுண்ட ஏகாதசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியாகும்.


திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். மேலும் அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி என தெரியாதவர்கள் திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை பெறலாம். கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன் குறைந்த எண்ணிக்கையில் லட்டுகள் தயாரிக்கப்பட்டன.

இப்போது 1 நாளைக்கு 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், விரைவில் மேலும் தரமான லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.