துவரங்குறிச்சி சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துவரங்குறிச்சி புது தெரு நாக மேடையில் எழுந்தருளியுள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை உடன் அக்னி பிரதிஷ்டை ஹோமங்கள் துவங்கியது. இரவு பூர்ணாஹூதியும் முதல் கால தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாரதனை யாகசாலை பூஜைகள், இரண்டாம் கால பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை மூன்றாம் கால பூர்ணாஹுதியும் தீபாரானையும் நடைபெற்றுது இன்று காலை 7 மணி அளவில் மஹா கும்பாராதனம்.
நாடி சந்தனம் விநாயகர் சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் விமானத்துக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்