சபரிமலைக்கு செல்ல வயதானவர்களுக்கு அனுமதியில்லை; அரசு அறிவிப்பு

வயதானவர்களுக்கு அனுமதியில்லை... கேரளாவில் உள்ள அருள்மிகு அய்யப்ப சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஐய்யப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரலாவில் இருந்து மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் வந்தும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கேரள அரசு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்துள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் அதன்படி, தமிழக பக்தர்கள் கேரள காவல் துறை அறிவித்துள்ள https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மேலும், சுவாமி தரிசனத்திற்கு முன்னர் 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்து வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு அதிகமான பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசின் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.