தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு இன்ப சுற்றுலா செல்ல ஏற்பாடு

திருப்பதி: இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். இதை அடுத்து நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் என்றால் 10 மணி நேரம் வரைக்கும் கூட பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவாக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், பயணிகளின் பெரும் சிரமத்தை குறைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் திருப்பதி சுற்றுலா பயணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் இச்சுற்றுலாவில் பயணிகளுக்கு இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. அதாவது, திருச்சியில் இருந்து திருப்பதி செல்ல பெரியவர்களுக்கு ரூ.3,330 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.3000கட்டணமும், சேலத்தில் இருந்து திருப்பதி செல்ல பெரியவர்களுக்கு ரூ.3,330 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.3000கட்டணமும்,

இதை தொடர்ந்து மதுரையில் இருந்து திருப்பதி செல்ல பெரியவர்களுக்கு ரூ.4,000 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.3,700கட்டணமும், கோவையில் இருந்து திருப்பதி செல்ல பெரியவர்களுக்கு ரூ.4,000கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.3,700கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளது. மேலும், இந்த சுற்றுலாவில் கலந்துகொள்ள விரும்பினால் 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.