திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் இந்த 2 நாட்கள் மூடப்பட உள்ளதாக தகவல்

திருப்பதி: திருப்பதியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இந்த கொடியேற்றத்தை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்நானம் என விழாவானது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது.

இதை அடுத்து இந்த நிலையில் நடப்பு ஆண்டு அடுத்த மாதம் அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாலும் நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணம் என்பதாலும் இந்த இரண்டு நாட்களும் கோவில் சுவாமி சன்னதி 2 நாட்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அக்டோபர் 25ம் தேதி காலை 8.11 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடை சாத்தப்படும். அதே போன்று நவம்பர் 8ம் தேதி காலை 8:40 முதல் இரவு 7:20 வரை கோயில் கதவுகள் மூடப்படும்.

பிறகு ஆகம விதிகளின்படி பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோயில் கதவுகள் திறக்கப்படும். மேற்சொன்ன இந்த 2 நாட்களிலும் கோயில் கதவுகள் மூடப்படும் காரணத்தால் விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் இலவச தரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.